குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
எதிர்வரும் 18 மாத காலப்பகுதியில் பொதுமக்களின் தேவைகளை புரிந்து கொண்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்முகாமைத்துவம் மற்றும் அனர்த்தமுகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய அமைச்சு பொறுப்பை ஏற்கும் நிகழ்வில் நேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
மீதொட்டுமுல்ல, சாலாவை ஆகிய இடங்களில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இதுவரையில் நீதி நிலை நாட்டப்படாவிட்டால், எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்குள் அதற்கானநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சாலவையில் இடம்பெற்ற சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்பொழுது நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதில் குறைபாடுகள் இடம்பெற்றிருக்குமாயின் அது தொடர்பான விடயங்களைக் கண்டறிந்துநிவாரணம் வழங்கப்படும்
கடந்த காலத்தில் கொள்கை மற்றும் திட்டத்தை வகுப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களின் அபிவிருத்திக்காக பயிற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேகத்தைமுன்னெடுப்பதே முக்கிய நோக்கமாகும்.
தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள நீர்பாசன அபிவிருத்தி பணிகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும். கடந்த காலப்பகுதியில் அனர்த்தங்களை எதிர்கொண்டதால் அரசாங்கம் பல சவால்களையும்எதிர்நோக்க வேண்டி ஏற்கட்டது. தற்பொழுது வறட்சி நிவாhரணம் சுமார் இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. மழை இல்லாததன் காரணமாக விவசாயிகளை பல நெருக்கடிகளைஎதிர்கொண்டுள்ளனர் எனவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் ஓருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு சரியான உரிய தகுதிகளைக் கொண்டவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவே எனவும் தெரிவித்துள்ளார்.