வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் குறித்த விவரங்களை கார்த்தி சிதம்பரம் மறைத்தாரா என்பது குறித்து வருமான வரித்துறை முதன்மை இயக்குனர் விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்; வெளிநாடுகளில் செய்த முதலீட்டை மறைத்ததாக கறுப்பு பண மோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் வருமான வரித்துறை கடந்த ஏப்ரல் மாதம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.
இந்த அழைப்பாணையை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் முன்னலையான சட்டத்தரணி ‘வெளிநாட்டு முதலீடு மற்றும் சொத்துக்கள் குறித்த எந்த ஒரு தகவலையும், கார்த்தி சிதம்பரம் மறைக்கவில்லை. வருமான வரிக்கணக்கு தாக்கலில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிவித்தார்
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘விளக்கம் கேட்டு அனுப்பிய அழைப்பாணையின் அடிப்படையில், கார்த்தி சிதம்பரத்திடம் வருமான வரித்துறை முதன்மை இயக்குனர் விசாரணையை ஆரம்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வழக்கிற்கு வருமான வரித்துறை முதன்மை இயக்குனர், வருகிற ஜூன் 5ம் திகதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டனர்