202
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பல படங்கள் உள்ளடக்கிய புகைப்பட அல்பம் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதியில், விடுதலைப் புலிகளின் பெண் போராளி உறுப்பினர் ஒருவரால் கைவிடப்பட்ட புகைப்பட அல்பம் ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போர் நடைபெற்று 9 வருடங்கள் கடந்த நிலையில் மீட்கப்பட்ட அல்பத்தில் காணப்படும் புகைப்படங்களில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பல படங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love