இலஞ்ச, ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட நீதிமன்றம் ஒன்றை அமைப்பது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் இதற்கான பாராளுமன்ற அனுமதியை பெற்றுக் கொள்ள இருப்பதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார்.
இலஞ்ச, ஊழல் வழக்குகளை விசாரிக்கும் நடவடிக்கையை மிகவும் சிறந்த முறையில் மேற்கொள்ளும் நோக்கில் இச்த விசேட நீதிமன்றம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சொத்து விபரங்களை வெளியிடாத அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எதிராக அறவிடப்படுகின்ற அபராதத் தொகையை அதிகரிப்பதற்கான சட்டமூலத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் இதற்காகவும் பாராளுமன்ற அனுமதியைப் பெற்றுக் கொள்ள உள்ளதாகவும் ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார்.