ஹவாய் தீவுகளின் ஹோனோலுலு (Honolulu,)பகுதியில் உள்ள கிலுயுயே (Kilauea) என்ற எரிமலை வெடித்து சிதறியதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த எரிமலை வெடித்தமையினால் சுமார் 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது எனவும் சுமார் 183 மீட்டர் தூரத்திற்கு எரிமலை குழும்பு பரவியுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் எரிமலை குழம்புகள் அப்பகுதி முழுவதும் ஆக்கிரமித்த வண்ணம் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் 1500-க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் சுற்றுலா பயணிகளுக்கும் அப்பிரதேசத்தினுள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.