வடமியன்மாரில் உள்ள பச்சை மாணிக்க சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மியன்மாரின் பல பகுதிகளில் பச்சை மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் இயங்கி வருகின்ற நிலையில், அந்நாட்டின் வடபகுதியில் உள்ள கச்சின் மாநிலத்துகுட்பட்ட வாக் கர் கிராமத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் இன்று அதிகாலை பல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது சுரங்கத்தின் ஒரு பாறை திடீரென்று உருண்டு கீழே விழுந்துள்ளது.
இதனால் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 9 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கபபட்டுள்ளது