நாட்டின் தகவல் தொழில்நுட்ப மையமாக விளங்கும் பெங்களூர் நகரத்தை, மிக மோசமான பாவ நரகமாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மாற்றி விட்டார் என கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் எதிர் வரும் 12-ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஆளும் கட்சியான காங்கிரஸ், மற்றும் எதிர்கட்சியான பாரதீய ஜனதாவும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறன. தேர்தல் நெருங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் அங்கு உச்சகட்ட பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்நிலையில் பெங்களூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி காங்கிரஸையும், அம்மாநில முதல்வர் சித்தராமையாவையும் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர், இந்தியாவின் பெருமை மிக்க பூங்கா நகரமான பெங்களூரை குப்பை நகரம் என மோடி கூறியிருப்பது அவமதிப்பாக உள்ளது. பிரதமர் மோடிக்கு இயல்பாகவே அடுக்கடுக்கான பொய்களை கூற தெரியும். ஆனால் நகரத்தின் அடுக்கடுக்கான கட்டிடங்களை காணுவது என்பது அவருக்கு கடினமாக தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.