இருபதுக்கு இருபது போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் இருபதுக்கு இருபது போட்டிகள் கடந்த மாதம் 7ம் திகதி ஆரம்பமாகி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் இதுவரை 500க்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப், மும்பை அணிகள் போட்டியிட்ட நிலையில் மும்பை அணி வெற்றியீட்டியது. இதில் மும்பை அணித் தலைவர் ரோகித் சர்மா 15 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலான 24 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதன்மூலம் இருபதுக்கு இருபது போட்டிகளில 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அதேவேளை இருபதுக்கு இருபது போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்த பட்டியலில் 844 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெய்ல் முதலிடத்திலும் பொல்லார்டு 525 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்திலும் பிரண்டன் மெக்கல்லம் 445 சிக்ஸர்களுடன் முன்றாம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது