Home இலங்கை முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்வை நடத்­து­வ­தற்கான ஏற்பாட்டில் மாகாண சபை..

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்வை நடத்­து­வ­தற்கான ஏற்பாட்டில் மாகாண சபை..

by admin

மே 18 முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்வை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் குறித்து வடக்கு மாகாண சபை­யி­னர் நாளை­ம­று­தி­னம் திங்கட்கிழமை ஆராயவுள்ளனர்.

கைத­டி­யி­லுள்ள முத­ல­மைச்­ச ­ரின் அமைச்­சில் இன்று இது தொடர்­பில் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளதெனவும் மாகாண சபை­யின் அவைத் தலை­வர், அமைச்­சர்­கள் மற்றும்  உறுப்­பி­னர்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் அழைப்பு விடுத்­துள்­ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த சில வரு­டங்­க­ளாக வடக்கு மாகாண சபையே முள்ளிவாய்க்கால் நினை­வேந்­தலை ஏற்­பாடு செய்து நடத்­தி­வ­ரு­கி­றது. வழ­மை­போன்று இந்த முறை­யும் அது தொடர்­பில் ஒழுங்­கு­களை மேற்­கொள்ள இந்­தக் கலந்துரையாடல்  ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதே­வேளை, முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை அனை­வ­ரும் ஒரு­மித்து ஒரே இடத்­தில் நினை­வு­கூர வேண்­டும் என்று யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யம் மீண்­டும் வலி­யு­றுத்­தி­யுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More