139
ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் பணியாற்றும் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் நாரந்தனைப் பகுதியில் வைத்து இன்று முற்பகல் வாள்வெட்டுக்குள்ளானார் என பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே காவற்துறை உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.
திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரே, காவற்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தினார் என்று காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த காவற்துறை உத்தியோகத்தர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Spread the love