171
இந்தியாவின் மிகவும் விரும்பத்தக்க ஆண்களின் பட்டியலில் நடிகர் பிரபாஸ் இரண்டாவது இடத்தில் உள்ளதாக பிரபல இதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இதேவேளை இவர் நடித்த சாஹோ திரைப்படமும் தற்போது வெளிவரவுள்ளது.
பிரபாஸ் நடித்த பாகுபலி மற்றும் பாகுபலி-2 உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தியப் படமாகும். இந்த படத்தில் கதாநாயகனாக நடித்ததின் மூலம் பிரபாஸ் உலகப் புகழ் பெற்ற நடிகரானார். அத்துடன் இந்தப் படம் பல்வேறு மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டும் துணைமொழியுடனும் பார்க்கப்படுகின்றது.
பாகுபலி படத்தை தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகளும் கிடைக்கத் தொடங்கின. மிகவும் பரபரப்பான நடிகர்களில் ஒருவராக மாறிவிட்ட பிரபாஸிற்கு பாகுபலி படத்தை தொடர்ந்து பல்வேறு காதல் விண்ணப்பங்களும் குவிந்த வண்ணம் உள்ளது. பாகுபலி படப்பிடிப்பில் மட்டுமே சுமார் 6,000 காதல் விண்ணப்பங்களை பிரபாஸ் நிராகரித்ததாக கூறப்படுகிறது. பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் பிரபாஸ் சூப்பர் ஸ்டார் வடிவில் திகழ்ந்து வருகிறார்.
இவரது நடிப்பில் வெளிவர உள்ள சாஹோ திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் பிரபல நாளிதழ் நடத்திய ஆய்வு ஒன்றில், இந்திய அளவில் அனைத்து தரப்பினராலும் மிகவும் விரும்பத்தக்க ஆண்கள் பட்டியலில் நடிகர் பிரபாஸ் இரண்டாம் இடத்தில் உள்ளார். இதேவேளை முதல் இடத்தில் இந்தி நடிகர் ரன்வீர் சிங் உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love