பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 18 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்துக்கு உட்பட்ட குவெட்டா பகுதியில் நேற்றையதினம் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு இருந்த வேளை திடீரென அங்கு வெடி விபத்து ஏற்பட்டதில் சில தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் சுரங்கத்தினுள் சிக்கியுள்ளதாகவும், அவர்கள் உயிருடன் மிட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சுரங்கத்தில் உள்ள மீத்தேன் வாயுவால் இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.