கன்னியாகுமரி கடல் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக இவ்வாறு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் 3 அதி நவீன படகுகளில் ‘சவுகாச்’ என்ற பெயரில் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர்; தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்
இதில் ஒரு குழுவினர் சின்னமுட்டம் முதல் கூடங்குளம் வரையிலும், இன்னொரு குழுவினர் சின்னமுட்டம் முதல் மணக்குடி வரையிலும், மற்றொரு குழுவினர் சின்னமுட்டம் முதல் முட்டம் கடற்கரை வரையிலும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் உள்ள 11 சோதனை சாவடிகளிலும் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் நேற்றையதினம் உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர்.