மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வான நீட் இந்தியா முழுவதும் இன்று நடைபெறுகின்ற நிலையில் சுமார் 13.26 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர். மருத்துவ படிப்புகளுக்காக இந்தியா முழுவதும் நீட் என அழைக்கப்படும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதன் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தானில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஆரம்பமாகும் இந்த தேர்வுக்காக கடும் சோதனைகளுக்கு பின்னரே மாணவர்கள் மையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர்.