பௌத்த விகாரைகளை தடை செய்ய வேண்டும் – சுமந்திரன் – மைத்திரி, ரணிலின் பதில் என்ன? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுவது தடைசெய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறித்த தமது நிலைப்பாடுகளை ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கருத்து, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதுடன் தார்மீக விரோத கருத்து என்பதுடன் இதன் மூலம் மத பேதங்கள் ஏற்படும். இதனால், சுமந்திரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதை மாத்திரமே சுமந்திரன் எதிர்க்கின்றார். வேறு மத தலங்களை நிர்மாணிப்பது அவருக்கு பிரச்சினையல்ல. முழு வடக்கு, கிழக்கிலும் பௌத்த அடையாளங்கள் பரவிக்கிடக்கும் போது சுமந்திரன் யாருடைய அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு இப்படியான கருத்துக்களை வெளியிடுகிறார் எனவும் ஓமல்பே சோபித தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.