குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஐக்கிய தேசியக் கட்சிக்கு மேலும் சில பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இந்த விடயம் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாளைய தினம் பெரும்பாலும் ஆறு அல்லது எட்டு உறுப்பினர்களுக்கு கட்சியின் பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன. நீண்ட காலமாக கட்சியின் சார்பில் பாராளுமன்றை பிரதிநிதித்துவம் செய்த உறுப்பினர்களுக்கு இவ்வாறு பதவி வழங்கப்பட உள்ளது.