பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று அறிவித்துள்ள நிலையில் அங்கு காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் இன்று கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்திருந்தனர்.
இதனால், முன்னெச்சரிக்கையாக அமைப்பு நிர்வாகிகளையும் காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இந்நிலையில், தலைமை செயலகத்தை சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் வீதியில் தடுப்புகளை வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் போராட்டம் மேற்கொள்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்திறங்கிய அந்த அமைப்பினர் 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது