குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜெர்மனியில் மேயர் தேர்தலில் வெற்றியீட்டிய வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தென் கிழக்கு ஜெர்மனிய நகரான ப்ரீபேர்க் (குசநiடிரசப ) இன் மேயர் பதவிக்காக 33 வயதான மார்டின் ஹோர்ன் (Martin Horn ) தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் வெற்றியீட்டிய மார்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் மார்டின் மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், பல் ஒன்றும் உடைந்துள்ளது. 56 வயதான நபர் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியதாகவும், காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 18 ஆண்டுகளாக நகரின் மேயராக கடமையாற்றி வந்த கிரீன் கட்சியின் வேட்பாளர் டைடர் சல்மோனை, மார்டின் தோற்கடித்திருந்தார். தேர்தலில் வெற்றியீட்டிய மார்டினுடன், செல்பீ எடுத்துக் கொள்ளும் போர்வையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது