குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என தான் கூறியதாக தெரிவிக்கப்படுவது உண்மைக்கு புறம்பானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சுமந்திரன், வார பத்திரிகை ஒன்றில் தான் கூறியதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனக் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் தான் கூறிய விடயத்தை திரிபுப்படுத்தி கூறி, பௌத்த மக்களை தூண்ட இதன் மூலம் முயற்சித்துள்ளனர். பௌத்த மக்கள் வாழாத பிரதேசங்களில் புத்தர் சிலைகள் நிர்மாணிக்கப்படுவதில் அர்த்தமில்லை என நான் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது கூறியிருந்தேன்.
அப்படியான பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலதிகமாக நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் ஊடக சந்திப்பில் கூறியிருந்தேன்.
பொய்யான செய்தியை வெளியிட்டு மக்கள் இடையில் மோதல்களை ஏற்படுத்த முயற்சித்தமை காரணமாக குறித்த பத்திரிகைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
சுமந்திரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய வேண்டும்…