தொழில் உரிமையாகும் என்னும் கருப்பொருளில் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கொழும்பு கோட்டை புகையிரத தொடருந்து நிலையத்துக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். சகல பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி தமிழ் , சிங்கள மொழிகளில் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். குறித்த போராட்டத்தைக் கலைக்கும் வகையில் காவல்துறையினா அவர்கள் மீது தண்ணீர்ப்பிரயோகம் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடவுள்ளதாக அறிந்த காவல்துறையினர் அவர்கள் செல்லும் பாதையையும் தடுத்து நீர்ப்பிரயோகம் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012 -2017 காலப்பகுதியில் வெளியேறிய 57,000 இற்கும் அதிகமான வேலையில்லாத பட்டதாரிகள் இருப்பதாகவும், அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையினாலும் இந்த போராட்டம் மேற்கொள்வதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.