நிலையான அபிவிருத்தி மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பு நிறைவுற்றதன் பின்னர் சரத் பொன்சேகாவும் ஏனைய சிலரும் சென்று இவ்வாதறு சென்று இவ்வாறு மன்னிப்புக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 3ஆம் திகதி தனது புதிய அமைச்சினை பொறுப்பேற்றுக் கொண்ட சரத் பொன்சேகா அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதும், கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற மேதினக் கூட்டத்தின் போதும் ஜனாதிபதியை விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது தொடர்பிலேயே மன்னிப்புக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது