157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதி சபாநாயகரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னமும் பெயரிடவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் பதவிக்கு யாரை நியமிக்க வேண்டுமென ஜனாதிபதி இன்னுமும் பரிந்துரையை முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே பிரதி சபாநாயகர் பதவி குறித்து தம்மால் எதனையும் தெரிவிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது கரு ஜயசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.பிரதி சபாநாயகராக கடமையாற்றி வந்த திலங்க சுமதிபால பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love