170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் மண்ணெண்ணை ஒரு லீற்றரின் விலை 57 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை காலமும் ஒரு லீற்றர் மண்ணெண்ணை 44 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. புதிய எரிபொருள் விலைப் பொறிமுறைமைக்கு அமைய மண்ணெண்ணையின் விலை 101 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு லீற்றர் பெற்றோல் தற்பொழுது 137 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 9 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது, இதன்படி டீசலின் விலை 119 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love