204
கென்யாவில் கனமழை காரணமாக அணை ஒன்று உடைந்ததில் 41 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கென்யா பகுதியில் உள்ள நகுரா நகரத்திலேயே நேற்று நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக மேற்படி அணை உடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோரை தேடும்பணி நடைபெற்று வருவதாகவும் சுமார் 5,000 குடும்பங்கள் இந்த இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்தவர்கள் தற்போது தற்காலிக முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
Spread the love