குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின் கண்ணாம்மூச்சி ஆட்டம் நீண்ட நாள் நீடிக்காது என டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மகேந்திரனை இன்டர் போல் காவல்துறையினர் விரைவில் கைது செய்து இலங்கையிடம் ஒப்படைப்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அர்ஜூன் மகேந்திரனின் இருப்பிடம் பற்றி யாருக்கும் தெரியாது எனவும் எந்த நாளும் இந்த கண்ணாம்மூச்சி ஆட்டத்தை அவரினால் ஆட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உதயங்க வீரதுங்க, ஜாலிய விக்ரமசூரிய, மஹிந்த ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்புவதில்லை எனவும், அர்ஜூன் மகேந்திரன் விவகாரத்தை மட்டுமே கேள்வியாக எழுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.