167
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கைத்தொலைபேசி மூலம் ; மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
விசாரணையில் மிரட்டல் விடுத்தது மண்ணடியைச் சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்
Spread the love