104 வயது விஞ்ஞானி டேவிட் குட்டோல் சட்ட உதவியுடன் உயிரை மாய்த்துக்கொண்டார். அவுஸ்திரேலியாவின் பல்கலைக்கழக ஆய்வுத்துறையில் கௌரவ பேராசிரியராக பணியாற்றிய 104 வயது கொண்ட விஞ்ஞானி டேவிட் குட்டோல் (David Goodall) சட்ட உதவியுடன் தன் உயிரை மாய்ந்து கொண்டார்.
அஸ்திரேலியாவின் பெர்த் நகரிலுள்ள எடித் கோவன் பல்கலைக்கழக ஆய்வுத்துறையில் கௌவரவ பேராசிரியராக பணியாற்றிய டேவிட் குட்டோலுக்கு முதுமைக்காலத்தில் இவருக்கு கொடிய நோய்கள் இல்லை என்ற போதிலும் அவரது வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமடைந்து வந்தது.
எனவே தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள குட்ஆல் விரும்பிய அவர் தனது தற்கொலைக்கு உதவுமாறு அவுஸ்திரேலிய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். எனினும் ஒருவரின் தற்கொலைக்கு உதவுவது சட்டவிரோதம் எனத் தெரிவித்து அஸ்திரேலியா மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் சுவிட்சர்லாந்தில், தங்கள் வேலையை தாங்களே செய்யும் அளவுக்கு உடல் ரீதியாக திடகாத்திரமாக இருக்கும் ஒருவர், நீண்ட காலமாக இறக்கும் கோரிக்கை கொண்டிருந்தால், அவரது தற்கொலைக்கு உதவுவது சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது.
எனவே அவரது அமைதியான மரணத்துக்கு உதவ முன்வந்த ‘எக்சிட் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் உதவியுடன் சுவிட்சர்லாந்துக்கு சென்ற டேவிட் பாசல் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு நேற்று காலையில் விஷ ஊசி செலுத்தி மரணம் விளைவிக்கப்பட்டது. அவர் அமைதியாக மரணித்ததாக எக்சிட் அமைப்பின் நிறுவனர் பிலிக் நிட்ஸ்கி கூறினார்.
முன்னதாக நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த டேவிட் குட்டோல்;, தனது வாழ்வை முடித்துக்கொள்ள ஆர்வமாய் இருப்பதாகவும், அஸ்திரேலியாவிலேயே இந்த வசதியை ஏற்படுத்தி தந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது