“இன்றைய இளைஞர், யுவதிகளே இராணுவத்தை சிங்கள இராணுவம் என எண்ணாதீர்கள். இராணுவ வேலையும் ஒரு அரச வேலை தான். எனவே வடக்கு இளைஞர்களும் இராணுவத்தில் இணைந்து நாட்டுக்குச் சேவையாற்ற முன் வரவேண்டும்” என வடக்கு இளைஞர்களை இராணுவத்தில் இணைய முன்வருமாரு யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி அழைப்பு விடுத்துள்ளார். சிங்கள டிப்ளோமா கற்கைநெறியைப் பூர்த்தி செய்த 600 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அங்கு உரையாற்றிய அவர்,
வடக்கு மக்கள் மிகவும் புத்திசாலிகள் நல்லவர்கள் எனினும் கடந்த 30 வருடப் போர் வடக்கு மக்களையும் தெற்கு மக்களையும் சற்று பிரித்து விட்டது. எனினும் தெற்கு சிங்கள மக்கள் வடக்கு தமிழ் மக்கள் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டவர்களாக உள்ளனர். 30 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் வடக்கில் மின்சாரம் இல்லாத நிலையில் கூட வடக்கிலிருந்து சிறந்த மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உருவாகியிருந்தார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதே வேளை வடக்கை இலக்கு வைத்து குறிப்பாக இளையவர்களை இலக்குவைத்து அவர்களின் மனங்களை வெல்வதிலும், தமிழ் தலைமைகளை மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தும் முயற்சிகளிலும் படையினர் ஈடுபட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக படையினர் வடக்கின் அரசியல் கட்சிகளை விமர்சிப்பதும், மாகாண சபையின் தீர்மானங்களை கிண்டல் செய்வதும், தமிழ் தலைமைகளை விமர்சிப்பதுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் படையினர் சிவில் சமூக செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபடுவதும், விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கண்காட்சிகள், கேளிக்கை நிகழ்ச்சிகளை வடக்கில் நடாத்துவதும் நுண்ணிய இராணுவ தந்திரோபாய நகர்வுகள் எனவும் புத்திஜீவிகள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இராணுவம் உதவி…
ஆயுதங்களால் வெற்றிகொண்ட “பனங்காட்டை” புத்திக்கூர்மையால் தமதாக்கும்படையினர்…