குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு ஈரான் அரசாங்கம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. சிரியாவின் இறையாண்மை மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. சில தசாப்தங்களில் சிரியா மீது இஸ்ரேல் நடத்தி வரும் மிக கடுமையான தாக்குதல்களாக அண்மைய தாக்குதல்கள் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய இராணுவ நிலைகள் மீது ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல்களை ஈரான் மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதிலும் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை ஈரான் மறுக்கவோஏற்றுக்கொள்ளவோ இல்லை.
மேலும் சிரிய இராணுவத்திற்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நூற்றுக் கணக்கான ஈரானிய படையினர் சிரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.