கிண்ணியா, ஆலங்கேணியில் காவற்துறை உதவி பரிசோதகர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் முதலாவது எதிரிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அ.பிரேமசங்கர் தீர்பளித்துள்ளார்.
2001ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி கிண்ணியா, ஆலங்கேணி பொலிஸ் காவலரணுக்கு அருகில் காவற்துறை உதவி பரிசோதகர் பரிசோதகர் ஒருவரை கொன்றமை தொடர்பில் கிண்ணியாவைச் சேர்ந்த இருவரும், புளியங்குளத்தைச் சேர்ந்த ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கில் பெயர் குறிக்கப்பட்ட முதலாம் எதிரி குற்றவாளி என்று இனங்காணப்பட்டு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.