கிளிநொச்சி – முழங்காவில், அன்புபுரம், இறங்குதுறையில் கடற்படையினர் நிலைகொண்டிருப்பதால், இப்பகுதி கடற்றொழிலாளர்கள் கடற்படைக் காவலரண் ஊடாகவே கடலுக்குச் செல்ல வேண்டியுள்ளது என கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தக் கிராமத்தில் எழுபதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடற்றொழிலையே நம்பியுள்ள நிலையில் இந்த இறங்குதுறை இன்மையால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்
இந்தக் குடும்பங்கள் கடற்றொழில் புரிவதற்கு குறித்த இறங்குதுறை முக்கியமானதாகும். ஆனால் கடற்படையினர் இந்த இறங்குதுறையில் நிலைகொண்டிருப்பதன் காரணமாக தொழிலுக்குச் செல்லும் போது நீண்டதூரம் சென்று கடலில் இறங்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 25 வருடங்களிற்கு மேலாக இந்த இறங்குதுறையை தாமே பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது கடற்படையினர் இறங்குதுறையிலிருந்து கடற்படையினரை இடமாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த பகுதி மக்கள் கேட்டு நிற்கின்றனர் இது தொடர்பில் அதிகாரிகள் அரசியல் வாதிகள் எனப் பலருக்கும் பல ஆண்டுகளாக கடிதங்கள் மூலம் ஆரிவித்தும் பயனற்று இருப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.