காலா படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவான நடிகர் ரஜினி நடித்துள்ளார். சமூகப் பிரச்சினையை விரிவாக பேசும் படமாக காலா அமையும் என்றும் காலா படக்குழு தெரிவித்துள்ளது. அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய பா.ரஞ்சித்தை நடிகர் ரஜினி காந்தே அழைத்து கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். தன் குடும்பத்தை இழந்து வாடும், தேடும் ஒரு தலைவனின் கதையை உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்தியது கபாலி படம்.
‘நாட்டில் ஒரு பக்கம் வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டாலும் பணக்காரர்கள் தான் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். நடுத்தர மக்களும் ஏழைகளும் அப்படியே தான் இருக்கிறார்கள். மும்பை தாராவியில் வசிக்கும் 70 சதவீதத்துக்கும் மேலான தமிழர்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை. வசிக்க வீடு இல்லை.
அங்கு காலம் காலமாக சொந்த இடம் இன்றி தவிக்கும் தமிழ் குடும்பங்களுக்கு உதவி செய்யத் தொடங்குகிறார் திருநெல்வேலியில் இருந்து செல்லும் காலா என்கிற கரிகாலன். அங்கிருக்கும் அரசியல்வாதி நானா படேகரின் பகையை சம்பாதிக்கிறார்.பின் மக்களால் தலைவனாக்கப்படும் ரஜினி நானா படேகரை எப்படி வென்று மக்களுக்கு நில வசதி செய்து தருகிறார் என்பதே கதை.