மியன்மாரில் ராணுவத்துக்கும், ஆயுதம் ஏந்திய குழுவினருக்குமிடையே இடையே மீண்டும் இடம்பெற்ற மோதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று அதிகாலை இடம்பெற்ற தாக்குதல்களில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ராணுவத்துக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபட்ட இனக் குழுக்கள் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் என மியன்மார் ராணுவ தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது
மியன்மாரின் ரக்கைன் மாவட்டத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ள பகுதிகளில், அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் மியன்மார் அரசு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளத் தொடங்கியது. இதனால் பாதிக்க்படப்ட சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக பங்களாதேசுக்கு இடம்பெயர்ந்துள்ள நிலையில் அங்கு மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.