யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் வெளிநாட்டு நீதவான்களுக்கு இடமில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. யுத்தம் தொடர்பிலான சம்பவங்களை விசாரணை செய்யும் உள்ளுர் பொறிமுறைமையில் வெளிநாட்டு நீதவான்களுக்கு இடமளிக்கப்படாது என தெரிவித்துள்ளது. படையினரை அரசாங்கம் ஒரு போதும் வேட்டையாடப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மின்சார நாற்காலி பற்றியிருந்த பீதியை இந்த அரசாங்கமே நீக்கியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
படையினருக்கு உச்சளவில் அரசாங்கம் மரியாதை வழங்கி வருவதாகவும் சில வழக்குகள் தொடர்பில் படையினர் கைது செய்யப்பட்டுள்ளமை அவர்களை பழிவாங்குவதாக அமைந்துவிடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1 comment
Leave alone foreign judges, what is happening to the inquiry locally.