159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் நடவடிக்கைகள் குறித்து ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரவ்வானி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளார். 2015ம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட அணுத் திட்ட உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகிக் கொண்டமை தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட அவர், ஈரானிய நலன்கள் உறுதி செய்யப்படுமாயின் ஏனைய ஐந்து நாடுகளுடன் தொடர்ந்தும் இந்த உடன்படிக்கையை பேண உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஈரானுக்கு பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love