குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் நானாட்டன் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில்; உள்ள காட்டு பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை வணஜுவராசிகளுக்கு சொந்தம் என குறிப்பிடப்பட்ட வங்காலை சரணாலயத்தில் உரிய அனுமதி இன்றி கற்றாழைச் செடிகளை அகழ்வு செய்த மூவர் வங்காலை பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு வங்காலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மன்னார் தாரபுரத்தை சேர்ந்த மூவரே குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர் . கற்றாழை பிட்டி காட்டு பகுதியில் இன்று காலை சந்தோகத்திற்கு இடமாக ஆட்கள் நடமாட்டத்தை அவதானித்த மக்கள் காட்டு பகுதியினுள் சென்று பார்வையிட்ட போது மேற்படி கற்றாழை செடிகள் நாற்பதுக்கு மோற்பட்ட பைகளில் நிரப்பப்பட்டு கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் காணப்பட்டதையடுத்து மக்கள் ஒன்று திரண்டு குறித்த மூவரையும் கைது செய்துள்ளனர்
பின்னர் வங்காலை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த பகுதிக்கு வருதை தந்த காவல்துறையினர் குறித்த கற்றாழைகளையும்; சந்தேகத்துக்கு இடமான மூவரையும் வங்காலை காவல் நிலையத்துக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்து சென்றுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக தாராபுரம் , எருக்கலம் பிட்டி ,வங்காலை ,கற்றாலை பிட்டி,ஆகிய பகுதிகளில் அதிகளவிலான கற்றாழை செடிகள் காணப்படுகிறது.
அதனை அகழ்வு செய்து கொடுக்கும் பட்சத்தில் தங்களுத்கு நாள் கூலி வழங்கப்படுவதாகவும் குறித்த கற்றாழைகள் குருநாகல் மாவட்டத்திற்கு பயிர்செய்கைக்காக அனுப்பிவைக்கப்படுவதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்
எனினும் இவ்வாறான நடவடிக்கைகளை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஒரு சில அரசியல்வாதிகளின் திட்டத்தின்படியே கற்றாழை செடிகள் வியாபார நோக்கத்திற்காக வேறு மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்
; இந்த கற்றாழை தமது பிரதேச மக்களின் மருத்துவ தேவைக்காக அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும் எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இவ்வாறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் குறித்த பிரதேச மக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.