172
ராமநாதபுரம் திருவாடானை அருகே இன்று காலை சுற்றுலா வாகனம் ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை வேளாங்கண்ணி ஆலயத்துக்கென பெண்கள், சிறுவர் சிறுமிகள் உட்பட 17 பேர் பயணம் செய்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
எதிரே மணல் ஏற்றிக்கொண்டு வந்த பாரவூர்தியுடன் மோதி விபத்து ஏற்பட்டதனால் இரு வாகனங்களும் பாரி சேதத்துக்குள்ளாகியுள்ளன. காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 5 சிறுவர், சிறுமிகள் உள்பட 13 பேரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்
Spread the love