குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இலங்கை மனித உரிமைகள் ஆனைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலக அதிகாரிகள் இன்று(14-05-2018) இரணைத்தீவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய ஆணையாளர் ரி.கனகராஜ் தலைமையிலான குழுவினர் இரணைத்தீவுக்குச் சென்று அங்கு தங்கியுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் சொந்த நிலத்திற்கு சென்று குடியேறிய மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பிலும் அவர்களின் வாழ்வுரிமை பற்றியும் ஆராய்ந்து விசாரணை செய்வதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் இரணைத்தீவுக்குச் சென்றுள்ளனர்.
இரணைத்தீவு மக்கள் தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு சொந்த பிரேரணையாகவும், அதேவேளை இரணைத்தீவு பொது மகன் ஒருவரின் முறைபாட்டிற்கு அமைவாகவும் அந்த மக்களின் அவர்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இரணைத்தீவுக்குச் சென்றதாக யாழ் மனித உரிமைக்ள் ஆணைக்குழுவின் பிராந்திய ஆணையாளர் ரி.கனகராஜ் தெரிவிதார்
அத்தோடு இன்று( 15) இரணைத்தீவில் இடம்பெறவுள்ள உயர் மட்ட கலந்துரையாடலின் போதும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீனமாக கண்காணிப்பாளராகவும் செயற்படும் எனவும் தெரிவித்த அவர் . மேலும் இரணைத்தீவு மக்களின் நிலமைகள் தொடர்பில் பூநகரி பிரதேச செயலாளர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ஆகியோரிடமும் அறிக்கைகளை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.