162
ஸ்பெயினில் நடைபெற்று வருகின்ற மட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் (Alexander Zverev ) வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தினை கைப்பற்றியுள்ளார்.
இறுதிப்போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் ஒஸ்ரியா வீரர் டோமினிச் திம்மை 6-4, 6-4 என்ற நேர்செட்டில் தோற்கடித்து சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். அலெக்சாண்டர் ஸ்வேரேவ் வென்ற 3-வது ஏ.டி.பி. உலக பயண மாஸ்ரர்ஸ் பட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது
Spread the love