சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் கற்கும் 980 மாணவர்களையும் கொத்தலாவெல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் சேர்ப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் உயர் கல்வியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மாணவர்களின் தகுதியை மதிப்பீடு செய்து அவர்களின் தகுதிக்கமைய கொத்தலாவெல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் இணைத்துக் கொள்வதற்காக இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.