குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தாய்வான் விமான சேவை நிறுவனம் பற்றிய தகவல்களை எயார் கனடா நிறுவனம் பிழையாக வெளியிட்டுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாய்வானின் வெளிவிவகார அமைச்சு எயார் கனடா விமான சேவைக்கு அதிகார பூர்வமாக இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.எயார் கனடா நிறுவனத்தின் விமான டிக்கட் பதிவு செய்யும் இணைய தளத்தில், தாய்வானின் தலைநகர் தாய்பேவை சீனாவின் ஓர் பகுதியாக காண்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் பிழையானது எனவும் உடனடியாக இந்த தகவல் மாற்றியமைக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலம் வரையில் சீனாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும், திடீரென இவ்வாறு சீனாவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சீனாவிற்கும் தாய்வானுக்கும் இடையில் கடுமையான முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தாய்வாய் சுயாதீனமான நாடு என அறிவித்து வரும் வேளையில், தாய் சீனாவின் ஓர் பகுதி என சீனா அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே எயார் கனடா நிறுவனம் இந்த சர்ச்சைக்குரிய விடயத்தை தனது இணைய தளத்தில் பட்டியலிட்டுள்ளது.