பாகிஸ்தான் மனித உரிமை செயற்பாட்டாளரை இலக்கு வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரான டைப் சயீடா ( Diep Saeeda) என்பவர் மீதே இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முகநூல் கணக்கின் ஊடாகவும், மின்னஞ்சல் ஊடாகவும் மேல்வயர்களை அனுப்பி சைபர் தாக்குதல் முயற்சிக்கப்பட்டுள்ளன.
மனித உரிமை செயற்பாட்டாளரான டைப் சயீடாவின் செல்லிடப்பேசி தகவல்களை திருடும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானிய புலனாய்வுப் பிரிவினர் இந்த தாக்குதல்களை நடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் உறுதியான ஆதாரங்கள் ஏதுவும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் முன்வைக்கப்படவில்லை. பாகிஸ்தானில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது இவ்வாறான சைபர் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரியுள்ளது.