176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
மன்னார், மருத மடு தேவாலயத்திற்கு அருகாமையில் 300 வீடுகள் நிர்மானிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த வீடுகள் நிர்மானிக்கப்பட உள்ளன. பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி இந்த வீடுகள் நிர்மானிக்கப்படுவதாக கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்த வீட்டு நிர்மானத் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாவினை வழங்குவதற்கு இணங்கியுள்ளது. தாம் சமர்ப்பித்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த வீட்டு நிர்மானத் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love