180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
யாழ் பன்னாலை மெய்கண்டான் மகாவித்தியாலய மாணவர்களுக்கு 25 துவிச்சக்கர வண்டிகளை வடமாகாண ஆளுநர் றெஜினோல்குரே இன்று (17) வழங்கி வைத்துள்ளார்.
யாழ் ரோற்றரிக் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வட மாகாண ஆளுநர் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.
பாடசாலை அதிபர் திருமதி சுலைமாமதி கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆளுநரின் செயலர் இளங்கோவன் பிரதேசசபை உறுப்பினர் ரூபன் ரோற்றிக் கழக தலைவர் செயலாளர் உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Spread the love