இறுதி யுத்த காலத்தில் கொல்லப்பட்ட பொது மக்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை ஒன்று கிளிநொச்சி நகர் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது. நேற்று(16-05-2018) மாலை ஆறு மணிக்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் அவ்வமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் இணைந்து ஆத்மசாந்தி பிரார்த்தனையை மேற்கொண்டனர்.
ஒருவொரு வருடமும் இவ்வமைப்பினால் மேற்கொள்ளப்படுகின்ற இவ் ஆத்மசாந்தி பிரார்த்தனையில் பொதுச் சுடரேற்றப்பட்டு பின்னர் நூற்றுக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்ட பின்னர் விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெறுவது வழக்கமாகும்.