திருவாரூர் அருகே கொத்தடிமையாக இருந்து ஆந்திராவைச் சேர்ந்த 2 குழந்தைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். கிராம நிர்வாக அலுவலருக்கு ஒரு தம்பதியினர் கொத்தடிமைகளாக குழந்தைகளை வைத்து வாத்து மேய்ப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து அந்த தம்பதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணைகளின்போது குறித்த தம்பதியினர் ஆந்திர மாநிலத்தினைச் சேர்ந்த 8 மற்றும் 10 வயதுடைய குழந்தைகளை குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் 20 ஆயிரம் கொடுத்து வேலைக்கு அழைத்து வந்து கொத்தடிமைகளாக வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையத் தொடர்ந்து குறித்த தம்பதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் அவர்களிடம் கொத்தடிமைகளாக இருந்த 2 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.