ஹவாயின் கிலாவேயா எரிமலையில் அண்மையில் ஏற்பட்டுள்ள சீற்றத்தினால் வெளியேறிய நச்சுப் புகை காரணமாக அங்கிருந்து பல அவசர பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன் இவ்வாறு வெளியேறும் நச்சுப்புகையிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிகையும் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எரிமலை கடந்த இரண்டு வாரங்களாக சீற்றமாக காணப்படுகின்ற நிலையில் நேற்றையதினம் புகை 10கிமீ உயரத்துக்கு வானை எட்டியதால் சுற்றுபுறம் எங்கும் புகை மண்டலமாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் எரிமலையைச் சுற்றி ஏற்பட்டுள்ள பிளவுகளால் பல நூற்றுக் கணக்கான மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 37 வீடுகள் வரையில் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அப்பகுதியில் வசிக்கும் 2000-க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளதுடன் சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.