குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இலங்கையில் வெளிநாட்டு பொறிமுறைமை விசாரணை அறிமுகம் செய்பய்பட வேண்டுமென பிரித்தானிய தொழிற்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய, தொழிற்கட்சியின் தலைவர் ஜெர்மி கொர்பைன்
எதிர்கால தொழிற்கட்சி அரசாங்கம் இலங்கைத் தமிழ் மக்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இனச் சுத்திகரிப்பு, யுத்தக் குற்றச் செயல்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் மற்றும் சர்வதேச குற்றச் செயல்கள் போன்றன தொடர்பில் சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறைமை அமுல்படுத்தப்பட வேண்டுமென தொழிற்கட்சியின் தலைவர் ஜெர்மி கொர்பைன் தெரிவித்துள்ளார்.