கர்நாடகாவில் சிறப்பு சட்டமன்றத்தை நாளை காலை 11 மணிக்கு கூட்டும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து சபையை வழிநடத்துவதற்கு தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையாவை அவர் நியமனம் செய்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கர்நாடக மாநில சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஆட்சியமைக்க 112 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் பாரதீய ஜனதா கட்சியிடம் 104 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளன. எனவே, வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வலை விரித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதனால் தங்களிடம் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை தக்க வைப்பதில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் கவனத்துடன் இருப்பதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசை வீழ்த்த ஆயத்தமாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது
இதேவேளை போபையா நியமனத்திற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறது. உச்ச நீதிமன்றத்தை அணுகி, போபையாவின் முந்தைய செயல்பாடுகளை சுட்டிக்காட்டி தடை பெறவும் முயற்சிக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.