பொறுப்பு கூறுதல் பொறிமுறைமைக்கு உதவத் தயார் – கனடா – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
பொறுப்பு கூறுதல் பொறிமுறைமைக்கு உதவத் தயார் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ருடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், சமாதானத்தை நிலைநாட்டுதல், நீதியை நிலைநாட்டுதல், பொறுப்புகூறுதல் போன்றன தொடர்பில் அரசாங்கத்தின் சகல முனைப்புக்களுக்கும் ஆதரவளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து ஒன்பது ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வில் பங்கேற்ற போது கருத்து வெளியிட்ட அவர், 26 ஆண்டுகளாக நீடித்து வந்த யுத்தம் காரணமாக சொல்ல முடியாத அளவிற்கு இழப்புக்கள் ஏற்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோர் பிரச்சினை குறித்து காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய அவர், யுத்தத்தில் சிக்கி உயிர்தப்பியவர்கள் தங்கள் இழப்புகளிற்கான பதில்களை கோரி நிற்கும் அதேவேளை யுத்தத்தின் காயங்கள் தொடர்ந்தும் நீடிக்கின்றன எனனவும், அனைவரின் மத்தியிலும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடிய வகையில் பொறுப்பு கூறுதல் பொறிமுறைமை ஒன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டுமேனவும் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.